ADDED : ஆக 26, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் வெற்றி நிச்சயம் - திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. மாணவி திருஷ்ணா வரவேற்றார். கலெக்டர் சுகபுத்ரா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் கிராந்தி குமார், கல்லுாரிச் செயலாளர் மதன் பேசினர்.
மாணவிகள் ஒவ்வொருவரும் திறன்படக் கற்று தொழில் முனைவோராக வேண்டும் என்றனர். நேச்சுரல்ஸ் சலுான் தலைமை நிர்வாக அதிகாரி சிவக்குமார், பீஹைவ் கம்யூனிகேஷன் கிளப் திறன் மேம்பாட்டு பயிற்சி தலைவர் சியாம் ராஜ், கல்லுா முதல்வா் சிந்தனா பேசினர். மாணவி மேதினி நன்றிக்கூறினார்.

