ADDED : நவ 10, 2025 12:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பூவாணி அரசு தோட்டக்கலை பண்ணையில் ஊரக வளர்ச்சி அலு வலருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணி பயிற்சியை துவக்கி வைத்து பேசினர்.
வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் வேளாண் மரக்கன்றுக்கான விதை சேகரிப்பு, விதை நேர்த்தி, நாற்றங்கால் உற்பத்தி, பாலித்தீன் பை களில் நாற்றுகள் நடுமுறைகள், அங்கக வேளாண்மை, மண்புழு உரம் தயாரிக்கும் முறை, மேட்டுப்பாத்தி அமைத்தல் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், பணித்தள பொறுப் பாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்துார் தோட்டக்கலை உதவி இயக்குனர் திலகவதி, துறை அலுவலர்கள் கலையரசி, ரமணா செய்திருந்தனர்.

