UPDATED : ஆக 25, 2026 05:38 PM
ADDED : ஆக 25, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியர்களுக்கான ஐந்து நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது.
இந்திய அரசின் மின்னணு , தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 2 கட்ட தேசிய திட்டத்தின் நிதி உதவியுடன் நேஷனல் பொறியியல் கல்லுாரி, அதன் தர உறுதிப் பிரிவு இணைந்து மைக்ரோசாப்ட் அசூர் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முகவர் உருவாக்குநர் என்ற தலைப்பில் 5 நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
மயிலாடுதுறை இன்னோவேஷன் நிறுவனத்தின் நிறுவனர் சுரேந்தர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார். பங்கேற்பாளர்களின் இறுதி திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் விளக்க காட்சிகளும் நடந்தன.
இப்பயிற்சி பட்டறையில் தென் தமிழக மாவட்டங்களில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
