தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டை புறவழிச் சாலை மேம்பாலம்: பணியில் மெத்தனம்

அருப்புக்கோட்டை புறவழிச் சாலை மேம்பாலம்: பணியில் மெத்தனம்

அருப்புக்கோட்டை புறவழிச் சாலை மேம்பாலம்: பணியில் மெத்தனம்


UPDATED : ஆக 08, 2026 05:20 PM

ADDED : ஆக 08, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 05:20 PM ADDED : ஆக 08, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோடு புறவழிச் சாலையின் ஒரு பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் மந்த கதியில் நடப்பதால் ஆண்டு கணக்கில் நீண்டு கொண்டே செல்கிறது.

அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அருப்புக்கோட்டை விருதுநகர் ரோட்டில் புறா வழிச்சாலை அமைக்க முடியும் செய்யப்பட்டு, 154.99 கோடியில் 9.1 கி.மீ., ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அருப்புக்கோட்டை - சுக்கிலநத்தம் ரோடு பணிகள் முடிவடைந்து 5 மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா கண்டது. இதையடுத்து, அருப்புக்கோட்டை -கோபாலபுரம் பகுதியில் ரயில் இருப்பு பாதை செல்வதால் அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பில்லர்கள் அமைக்கப்பட்ட பின், கர்டர்கள் பொருத்தப்பட வேண்டும். பணிகள் மந்த கதியில் நடப்பதால் , ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ரோடு திறப்பதற்கு முன்பே பெயர்ந்து பராமரிப்பு பணிகளும் நடந்து முடிந்த நிலையில், மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் விரைவில் பால பணிகளை முடித்து மக்கள் பயன்பாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us