/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறு பள்ளம் கிடங்கானது: பழுதாகும் வாகனங்கள்
/
சிறு பள்ளம் கிடங்கானது: பழுதாகும் வாகனங்கள்
ADDED : அக் 19, 2025 05:59 AM

விருதுநகர்: விருதுநகரில் புல்லலக்கோட்டை ரோடும், நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடும் இணையும் இடத்தில் இருந்த சிறு பள்ளம் பெரிதாகி கிடங்காகி விட்டதால் வாகனங்கள் பழுதாகி வருகின்றன.
விருதுநகரில் புல்லலக்கோட்டை ரோட்டில் இருந்து சர்வீஸ் ரோடு இணையும் பகுதி முக்கிய இடமாக உள்ளது. நகரில் இருந்து வெளியேறி நான்கு வழிச்சாலை செல்ல இது முக்கியமான சர்வீஸ் ரோட்டை கொண்டுள்ளது.
தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் புல்லலக்கோட்டை ரோடும், சர்வீஸ் ரோடும் இணையும் இடத்தில் சிறு பள்ளம் இருந்தது. நாளடைவில் வாகனங்கள் வந்து சென்று பள்ளம் கிடங்காகி பெரிதாகி விட்டது.இதனால் வாகனங்கள் பழுதாகின்றன. வாகனங்களை ஓட்டுவோரின் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ, நகராட்சி நிர்வாகமோ கிடங்கான பெரிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.