ADDED : ஏப் 11, 2026 08:46 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி:திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மீனாட்சிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்த போது அங்கு பாம்பு இருப்பதை பார்த்து அலறி அடித்து தங்கள் பெற்றோரிடம் கூறினர்.
அங்கிருந்தஆசிரியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் சந்திரசேகரன் , சிறப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பீரோவுக்கு அடியில் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள நாக பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
----
