ADDED : செப் 08, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசியில் ஆசிரியர் தினத்தை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டயமண்ட்ஸ் சார்பில் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பூங்காவில் சமூக வாசிப்பு அமர்வு துவங்கப்பட்டது. கிளப் உறுப்பினர்கள் அமைதியாக வாசிக்க கூடினர். அமைதியான இந்த செயல் உள்ளூர்வாசிகளின் கவனத்தை ஈர்த்தது, பெரியவர்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை இந்த முயற்சியைத் தொடர கிளப் திட்டமிட்டுள்ளது, வாசிப்புப் பழக்கத்தை அனுபவிக்க மக்களைஅழைக்கிறது.