ADDED : ஆக 31, 2026 12:14 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி 1947 ஆக.11ல் துவங்கப்பட்டது. இக்கல்லுாரியின் 80வது ஆண்டு துவக்க விழாவில் கல்லுாரி முதல்வர் சாரதி வரவேற்றார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினரான சிவபிரகாஷ், கல்லுாரி வளாகத்தில் நிறுவப்பட்ட 95 கிலோவாட் சூரிய மின் உற்பத்தியை துவக்கி வைத்தார். இதில் உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
