தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எஸ்.ஐ.ஆர்., படிவங்களை திருப்பிக் கொடுக்க ஓட்டுச்சாவடிகளில் நாளை வரை சிறப்பு முகாம்

 எஸ்.ஐ.ஆர்., படிவங்களை திருப்பிக் கொடுக்க ஓட்டுச்சாவடிகளில் நாளை வரை சிறப்பு முகாம்

 எஸ்.ஐ.ஆர்., படிவங்களை திருப்பிக் கொடுக்க ஓட்டுச்சாவடிகளில் நாளை வரை சிறப்பு முகாம்


ADDED : நவ 29, 2025 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து திருப்பிக் கொடுக்க ஓட்டுச்சாவடிகளில் நேற்று முதல் நாளை (நவ.30) வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடக்கிறது, என கலெக்டர் சுகபுத்ரா கூறினார்.

அவரது செய்திக்குறிப்பு: ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று படிவத்தை பூர்த்தி செய்ய உரிய வழிகாட்டுதல்கள் வழங்கியும், படிவத்தை மீளப்பெறும் நடவடிக்கைகளையும் செய்யும் நிலையில், பூர்த்தி செய்யும் போது ஆதார் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் வழங்குவது கட்டாயமில்லை.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்ட அந்தந்த ஓட்டுச்சாவடி முகவர்களிடம் கணக்கெடுப்புப் படிவத்தின், மற்றொரு படிவத்தில் ஒப்புதல் பெற்று வழங்கலாம். பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெற்று, அதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கான செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதை எளிதாக்குவதற்காகவும், 2002 வாக்காளர் பட்டியலில் பெயர்களைக் கண்டறிய உதவி செய்வதற்காக, படிவங்களை நிரப்புவதற்காக, நிரப்பிய படிவங்களை வழங்குவதற்காக நேற்று முதல் நாளை 30 வரை 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிக்குட்பட்ட 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 வாக்காளர்களில் 16 லட்சத்து 6 ஆயிரத்து 999 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 12 லட்சத்து 44 ஆயிரத்து 548 கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எனவே நிலுவையில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதால், வாக்காளர்கள் கடைசி தேதி வரை காத்திராமல் தாங்கள் படிவங்களைப் பூர்த்தி செய்து, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்று, நாளை நடக்கும் முகாம்களில் வழங்கலாம், என் றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us