ADDED : செப் 18, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இ–கே.ஒய்.சி., பதிவு செய்யாத ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு இன்று(செப். 19) நேரில் சென்று இ–கே.ஒய்.சி., பதிவு செய்யலாம்.
பதிவு செய்யாத எவரேனும் பணிநிமித்தமாக தமிழகத்தின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர் எனில், அவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஸ்மார்ட் கார்டுடன் சென்று பதிவு செய்யலாம். இப்பணி நுாறு சதவீதம் நிறைவு செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
