ADDED : ஜூன் 04, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம் ஜூன் 24ல் விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.
இதில் திருநங்கைகளுக்கு நலவாரியம் அட்டை வழங்குதல், ஆதார் அட்டை திருத்தம், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
2024ஐ போல் இந்தாண்டும் இம்முகாம் நடத்தக் கோரி மே 27ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.