/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., வார்டுகளில் சிறப்பு கூட்டம்
/
ஸ்ரீவி., வார்டுகளில் சிறப்பு கூட்டம்
ADDED : அக் 29, 2025 07:46 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் வார்டுகள் வாரியான சிறப்பு கூட்டங்கள் நடந்தது.
நகராட்சி வார்டுகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள்குறித்து அந்தந்த நகராட்சி கவுன்சிலர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 22 வார்டுகளில் கடந்த 2 நாட்களாக சிறப்பு கூட்டம் நடந்தது.நேற்று நகராட்சி 5வது வார்டில் சேர்மன் ரவி கண்ணன் தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது.
இதில் பல்வேறு வசதிகள் செய்து தரக்கோரி மக்கள் மனு அளித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் அளித்தார். கூட்டத்தில் துணைத் தலைவர் செல்வமணி, கமிஷனர் குமார், நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ், ஆறுமுகம், சுகாதார அலுவலர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள், மக்கள் பங்கேற்றனர்.

