ADDED : மார் 20, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு யுகாதி திருவிழா சிறப்பு வழிபாடு நடந்தது .
நேற்று மாலை 6:30 மணிக்கு வெள்ளி குறடு மண்டபத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்க மன்னார் கருடாழ்வார், 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். பின்னர் யுகாதி விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனையடுத்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்த்தம், சடாரி ஆசீர்வாதம், கோஷ்டி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
