தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எஸ்.பி.கே., பள்ளி ஆண்டு விழா

 எஸ்.பி.கே., பள்ளி ஆண்டு விழா

 எஸ்.பி.கே., பள்ளி ஆண்டு விழா


ADDED : டிச 22, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் நீதிபதிகள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

விழாவிற்கு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் காசி முருகன் வரவேற்றார். அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா மற்றும் சசிகலா சுதாகர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவள்ளி, குற்றவியல் நீதிபதி ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

உறவின்முறை செயலர் சரவணன், துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் கனகராஜ், அமுதலிங்கேஸ்வரர் கோயில் டிரஸ்டி கணேசன் மற்றும் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த பள்ளிகளின் செயலர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைவர் ராஜேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us