தனித்திறனை வளர்க்கும் ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்விக்குழுமம்
தனித்திறனை வளர்க்கும் ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்விக்குழுமம்
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 03:46 PM

ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்வி குழும தாளாளர் கி.ராஜு கூறியதாவது: எமது ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளையின் கீழ் பி.எஸ்.என்.எல்., கல்வியியல் கல்லுாரி மேட்டமலை, ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி, மாரனேரி, சிவகாசி, ஸ்ரீஹரா சர்வதேசப்பள்ளி கோவில்பட்டி, சமபாரதம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, பேரையூர், மதுரை, ஸ்ரீ வித்யசிக்ஷா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, செம்பட்டி, திண்டுக்கல், சிறப்பான முறையில் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.
எமது ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளையின் பல்கலை பருவத்தேர்வில் தங்கப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.25,000 பணமுடிப்பும் பாராட்டுச் சான்றிதழும் வழங்குவதுடன், தரவரிசையில் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு ரூ.10,000 பணமுடிப்பும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
உயரிய உயர்கல்வி என்ற கனவை சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லுாரி நனவாக்கி வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.
கல்வி குழுமம் செயலாளர் முத்துக்குமார், உறுதுணையாக செயல்படுகிறார். இக்குழுமம் சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி வாழ்வியலோடு கூடிய கல்வி முறை பயிற்றுவிக்கப்படுகிறது.
