/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து
/
ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து
ADDED : நவ 07, 2024 01:16 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழும் தண்ணீர் பெரியகுளத்திற்கு வருவதால் கண்மாயில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையினால் செண்பகத்தோப்பு பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டது.
தொடர்ந்து பெய்த மழையினால் கண்மாய் நிரம்பி கடந்த சில நாட்களுக்கு முன்பு மறுகால் விழுந்தது.
அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு ஓரிரு நாட்களாக வரத் துவங்கியுள்ளது இதனால் படிப்படியாக கண்மாயில் நீர்மட்டம் அதிகரித்து கடல் போல் காட்சி அளிக்கிறது.
கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் தொடர்ந்து மழை பெய்து பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழ வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.