/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு
/
ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு
ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு
ஸ்ரீவி., புதிய பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு
ADDED : ஜூன் 28, 2025 11:17 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்ட நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் ரவிக் கண்ணன் தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார். கமிஷனர் பிச்சுமணி, இன்ஜினியர் கோமதி சங்கர் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம், புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு மதிப்பீட்டுக் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்வு செய்தல், பல்வேறு வார்டுகளில் அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகள் செய்தல் உட்பட 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.