பிளக்ஸ் போர்டுகளை அகற்ற ஸ்ரீவி., எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
பிளக்ஸ் போர்டுகளை அகற்ற ஸ்ரீவி., எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
ADDED : மே 17, 2026 03:53 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதியில் பஜார் வீதிகள், வணிக நிறுவனங்கள் முன் மக்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ் போர்டுகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ. கார்த்திக் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் அனைத்து பஜார் வீதிகளிலும், பல்வேறு தெருக்களிலும் மக்களுக்கு இடையூறாகவும், வணிக நிறுவனங்களை மறைக்கும் வகையிலும் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பல தனி நபர்களும் பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தனர்.
இதில் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட், வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் கடைகளை மறைக்கும் வகையில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சட்டசபை முடிந்து நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துார் வந்த எம்.எல்.ஏ. கார்த்திக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில் தொகுதியில் அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
