/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
/
ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
ADDED : ஜன 03, 2024 05:45 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்.: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இக்கோயிலில் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
கோயில் வடக்கு பகுதியில் உள்ள சிவகங்கை தெப்பம் புனரமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உட்பகுதியில் பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளது. இந்நிலையில் பிப்.2ல் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அனுமதிக்கு கோயில் நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில் கோயில் ராஜகோபுரத்தை சுற்றி மூடப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
கும்பாபிஷேகத்திற்காக கோயில் முன்புறம் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு யாகசாலைக்காக வேலைகளும் நடந்து வருகிறது.