/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் ----- திருப்பதி நேரடி ரயில் சேவை அவசியம்: மாணிக்கம் தாகூர் எம்.பி., கருத்து

ADDED : செப் 01, 2025 02:05 AM
சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்துார் - திருப்பதி ஆகிய இரு ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் நேரடி ரயில் சேவை அவசியம் என சிவகாசியில் மாணிக்கம்தாகூர் எம்.பி., கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அழுத்தம் காரணமாகவே பழனிசாமியுடன் அண்ணாமலை கைகோர்த்து உள்ளார். இதை நடிப்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
காமராஜர் பிறந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை தலைமை நியாயமாக முடிவு செய்யும். ஸ்ரீவில்லிபுத்துார் -- திருப்பதி ஆகிய இரு ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் நேரடி ரயில் சேவை அவசியம். இது குறித்து லோக்சபாவில் வலியுறுத்துவேன். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை சுற்றுலா என விமர்சிக்கும் அன்புமணி, பிரதமர் மோடியின் சீன பயணத்தை சுற்றுலா என கூற முடியுமா.
குஜராத்தில் என்ன பாலாறும் தேனாறுமா ஓடுகிறது. திருட்டு, தவறுகள் உள்ளிட்ட சம்பவங்களை வைத்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூற முடியாது. திட்டமிடப்பட்ட மற்றும் பெரிய அளவிலான குற்றங்கள் நடந்தால்தான் சட்டம் ஒழுங்கு செய்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.