/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : டிச 25, 2025 06:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு ஒரு முறையாவது சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு பேயனாற்றிலிருந்தும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதில் நகரின் மேற்கு பகுதியில் உள்ள 10 வார்டுகளுக்கு செண்பகதோப்பு பேயனாறும், மற்ற வார்டுகளுக்கு தாமிரபரணி குடிநீரும் வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் வரை 120 கிலோமீட்டர் தூரம் பயணித்து வர வேண்டிய நிலையில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பின் காரணமாக குடிநீர் சப்ளை செய்யும் நாட்கள் இடைவெளி அதிகரித்து வருகிறது.
ஆரம்பத்தில் 7 முதல் 10 நாட்கள் மட்டுமே இருந்த இடைவெளி தற்போது
அதனையும் கடந்து செல்வதால் மக்கள் குடிநீருக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே, குறைந்த பட்சம் 5 நாட்களுக்கு ஒரு முறை சீரான இடைவெளியில் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.