/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்பாட்டிற்கு வராத சைக்கிள் ஸ்டாண்ட் தவிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில் பயணிகள்

ADDED : மார் 19, 2025 05:30 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் சைக்கிள் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வராததால் வெளியூர் செல்லும் பயணிகள் தங்கள் டூவீலர்களை நிறுத்தி செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேஷனில் லிப்ட் வசதி, டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள், கோச் பொசிஷன் போர்டுகள், போதிய நிழற்குடை, இருக்கை வசதிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேஷன் போர்டிகோ பகுதியும் அழகு படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சைக்கிள் ஸ்டாண்ட் பணிகள் முழுமை அடையாமல் செயல்பட்டதற்கு வராமல் உள்ளது.
இதனால் காலையில் மயிலாடுதுறை, செங்கோட்டை ரயில்களில் வெளியூர் பயணிக்கும் மக்கள் இரவு திரும்பி வந்து மீண்டும் தங்கள் டூவீலரை எடுத்து செல்வதற்கு வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, சைக்கிள் ஸ்டாண்டை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் முன்னுரிமை கொடுத்து பணிகள் மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.