/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துவங்கியது எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தமிழ்த் தேர்வில் 531 பேர் ஆப்சென்ட்

ADDED : மார் 29, 2025 06:35 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு துவங்கியது. முதல் தேர்வான தமிழில் 531 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்காக மாணவர்கள் ஆயத்தமாகிய நிலையில் நேற்று முதல் தேர்வுகள் துவங்கின.
விருதுநகர், சிவகாசி என இரு கல்வி மாவட்டங்களை சேர்ந்த 357 பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 351 மாணவர்கள், 12 ஆயிரத்து 740 மாணவிகள்என 25 ஆயிரத்து 091 மாணவர்கள் விண்ணப்பித்ததில், 11 ஆயிரத்து 974 மாணவர்கள், 12 ஆயிரத்து 585 மாணவிகள் என 24 ஆயிரத்து 559 பேர் தேர்வெழுதினர். இதில் 531 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
117 மையங்களில் தேர்வுகள் நடந்தன. 5 தனியார் தேர்வர்களுக்கான மையங்களும் அமைக்கப்பட்டன. அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார் ஜி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளிகள் வினாத்தாள் திருத்தும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 290 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவுபவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 27 வழித்தடங்களில் போலீஸ் ஏந்திய பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.