/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேங்கும் கழிவுநீர், வராத குடிநீர், எரியாத தெருவிளக்குகள்: சிரமத்தில் காரியாபட்டி சிலோன் காலனி குடியிருப்போர்

ADDED : நவ 05, 2025 12:48 AM

காரியாபட்டி: ரோடு வசதியின்றி புதர் மண்டி கிடக்கும் வீதிகள், தெருக்களில் தேங்கும் கழிவுநீர், குழாய் பதித்தும் வராத ஜல்ஜீவன் குடிநீர், எரியாத தெருவிளக்குகளால் இருளால் நடமாட அச்சம் , ஓடை ஆக்கிரமிப்பால் தேங்கும் மழை நீர் உட்பட பல்வேறு பிரச்னைகளால் காரியாபட்டி சிலோன் காலனி குடியிருப்போர் சிரமத்தில் உள்ளனர்.
குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தனலட்சுமி, ராஜலட்சுமி, சங்கீதா, வளர்மதி, ஆயம்மாள், பாண்டியம்மாள் கூறியதாவது:
காரியாபட்டியில் சிலோன் காலனி உருவாகி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லை. வீதிகள் செடிகள் முளைத்து, புதர் மண்டி கிடக்கின்றன. விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. வீதியில் பேவர் பிளாக் கற்கள் பதித்துத் தர பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வீதியில் தேங்குகிறது. கொசு பகலிலே கடிக்கிறது. கொசு மருந்து அடிக்கவில்லை. குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குடிநீர் சப்ளை செய்ய ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய், மீட்டர் பதிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகின. இதுவரை தண்ணீர் வந்த பாடில்லை.
தரை தள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின் மீட்டர் பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடுகின்றனர். அறியாமையில் கை வைத்தால், கடுமையாக பாதிக்கும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. உள்ளூர் குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.
காலனி அருகே செல்லும் பிரதான ஓடை ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயின. மழை நேரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி, நடமாட முடியவில்லை. தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை. இருளில் நடமாட சிரமம் ஏற்படுகிறது. 60 ஆண்டுகளாக எந்த பணிகளும் நடைபெறாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்., என்றனர்.