/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜூன் 26ல் மாநில கால்பந்து போட்டி
/
ஜூன் 26ல் மாநில கால்பந்து போட்டி
ADDED : ஜூன் 20, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கால்பந்தாட்ட கழக தலைவர் லட்சுமணன் கூறியதாவது: தமிழ்நாடு கால்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான ஆண்களுக்கான ஜூனியர் 16 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டிகள் சாத்துாரில் வைத்து நடத்துகிறது. மாநிலத்தின் 26 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியின் போதே தமிழ்நாடு ஜூனியர் அணியும் தேர்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்படும் தமிழக அணி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும்.
இப்போட்டி ஜூன் 26 முதல் 29 வரை எஸ்.எச்.என்., எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது, என்றார்.