/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மே மாத விடுமுறை முடியும் முன் பொதுமாறுதல் நடத்த வேண்டும் மாநில பொதுச்செயலாளர் பேட்டி
/
மே மாத விடுமுறை முடியும் முன் பொதுமாறுதல் நடத்த வேண்டும் மாநில பொதுச்செயலாளர் பேட்டி
மே மாத விடுமுறை முடியும் முன் பொதுமாறுதல் நடத்த வேண்டும் மாநில பொதுச்செயலாளர் பேட்டி
மே மாத விடுமுறை முடியும் முன் பொதுமாறுதல் நடத்த வேண்டும் மாநில பொதுச்செயலாளர் பேட்டி
ADDED : மே 22, 2025 12:22 AM

விருதுநகர்: தமிழகத்தில் மே மாத விடுமுறை முடியும் முன் பொது மாறுதல் நடத்த வேண்டும் என விருதுநகரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதி அளித்தது போல்பழைய ஒய்வூதிய திட்டத்தை அறிவித்திட வேண்டும். கோடை விடுமுறையானமே மாதம் முடியும் முன்பே ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக, நேர்மையாக அனைத்து இடங்களையும் காட்டி நடத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும்.
கற்றலில் பிளஸ் 1, 2 தேர்ச்சி குறைவான பாடங்களுக்கு ஆசிரியர்களை தரக்குறைவாகவும், ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்ற வகையில் கல்வி அதிகாரிகள், கலெக்டர்கள் ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களை மதிப்பான முறையில் நடத்திட வேண்டும். ஆய்வு என்ற பெயரில் கற்றல் சாரா அலுவலர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும்.
கற்றல் சார்ந்த வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் மட்டுமே கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்த உதவிடும். கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு உறுதி செய்ய வேண்டும்.இது குறித்து திட்ட இயக்குனர் மூலமாக உத்தரவு வருவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பிளஸ் 2 வரை சத்துணவு அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். செய்முறை தேர்வு நோட்டுகளை இலவசமாக வழங்க வேண்டும். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஜூன் இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். காலிப்பணியிடங்களை அவுட்சோர்சிங்கில் நியமிக்காமல் 1500 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். பதவி உயர்வு கொடுக்காததால் உள்ள காலிப்பணியிடங்கள் 900 ஆக உள்ளது. அரசு கொள்கை முடிவெடுத்து விரைந்து நிரப்ப வேண்டும், என்றார்.