/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது பா.ஜ., மாநில செயலாளர் பேச்சு

ADDED : பிப் 17, 2025 05:29 AM
விருதுநகர் : 'மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது', என விருதுநகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பா.ஜ., மாநில செயலாளர் மீனாதேவ் தெரிவித்தார்.
விருதுநகரில் நடந்த மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக்கூட்டத்தில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாநில செயலாளர் மீனாதேவ், கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மேற்கு மாவட்ட தலைவர் சரவண ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில் மாநில செயலாளர் மீனாதேவ் பேசியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் ஒரு குடும்பத்திற்கு நாம் போடும் பட்ஜெட் போல தேவை அறிந்து போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 2013 -- 14ம் ஆண்டில் ஒதுக்கியதை விட கூடுதல் தொகை தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 6640 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்ருத் திட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்துார், கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷன்கள் நவீன முறையில் மேம்படுத்தப்படுகிறது.
தற்போது ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பயனடைவர்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் நடுத்தர மக்களின் சிரமங்கள் குறித்து நினைத்து பார்க்க மாட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் மருந்து கடைகள் துவக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது போன்று மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வெளியிடுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாதல் அதிகரித்துள்ளது, என்றார்.