நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பில் பி.ஆர்.சி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டியலில் திருச்சி சவுந்தர் பிரதர்ஸ் அணி முதலிடம், விருதுநகர் ஆசை அணி இரண்டாமிடம், மேலத் தொட்டியபட்டி அணி மூன்றாமிடம், பி.ஆர்.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் பணி நான்காமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் முருகக்கனி, தொழிலதிபர் கார்த்திகேயன், பாஸ்கரன் வெற்றி கோப்பை, பரிசுத்தொகைகளை வழங்கினர்.