/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
/
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி
ADDED : ஜூன் 20, 2025 11:57 PM

ராஜபாளையம்: ராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் பள்ளி மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி துவங்கியது.
ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கூடை பந்து போட்டிகள் மின்னொளி போட்டிகளாக நடைபெறுகிறது.
கும்பகோணம், துாத்துக்குடி, திண்டுக்கல், சேலம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
காலை, மாலை மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகள் லீக் , புள்ளி அடிப்படையில் நடைபெறுகின்றன. பள்ளியின் மேனேஜிங் டிரஸ்டி கிருஷ்ணம ராஜு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செண்பகவள்ளி வரவேற்றார். ராஜபாளையம் டி.எஸ்.பி., பஸினா பீவி போட்டிகளை துவக்கி வைத்தார்.
வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்