/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வசதிகளின்றி வாடகை கட்டடத்தில் ஸ்டேஷன்
/
வசதிகளின்றி வாடகை கட்டடத்தில் ஸ்டேஷன்
ADDED : பிப் 26, 2024 01:02 AM
திருச்சுழி : திருச்சுழியில் புதியதாக துவங்கப்பட்ட மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வசதிகள் இன்றி இயங்கி வருகிறது.
திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன், கட்டனூர் உட்பட ஸ்டேஷன்களுக்கு கட்டுப்பட்ட கிராமங்களில் பெண்களுக்கான வழக்குகள், புகார்கள் கொடுப்பதற்கு அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டியிருந்தது. பல கி.மீ., தாண்டி வர வேண்டியிருப்பதால் புகார் கொடுக்க வரும் பெண்களும் வழக்குகளை விசாரிக்கச் செல்லும் மகளிர் போலீசாரும் அலைய வேண்டி இருந்தது. இதை கருத்தில் கொண்டு திருச்சுழியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் துவங்க 3 மாதத்திற்கு முன்பு அரசு அறிவித்தது. இதையடுத்து திருச்சுழி பஜார் ஸ்டேஷனில் மகளிர் ஸ்டேஷன் செயல்பட்டது. பின் பூமிநாதர் கோயில் அருகில் ஒரு பழைய வாடகை கட்டடத்தில் தனியாக 4 நாட்களாக இயங்கி வருகிறது. இந்த கட்டடம் பழையதாகவும் வசதிகள் இன்றி இருப்பதால் புகார் கொடுக்க ஒரு பெண்களும் போலீசாரும் சிரமப்படுகின்றனர். மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு என தனியாக கட்டடம் கட்டி அரசு வசதிகள் செய்து வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

