/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் நகைகள் வாங்குவதாக நடித்து 2 பவுன் செயின் திருட்டு
/
ஸ்ரீவி.,யில் நகைகள் வாங்குவதாக நடித்து 2 பவுன் செயின் திருட்டு
ஸ்ரீவி.,யில் நகைகள் வாங்குவதாக நடித்து 2 பவுன் செயின் திருட்டு
ஸ்ரீவி.,யில் நகைகள் வாங்குவதாக நடித்து 2 பவுன் செயின் திருட்டு
ADDED : செப் 25, 2024 01:44 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நகைகள் வாங்குவது போல் நடித்து கவரிங் செயினை வைத்து விட்டு 2 பவுன் தங்கச் செயினை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் சொர்ணம் ஜூவல்லரி நடத்தி வருபவர் கிருஷ்ணன் 53. இவரது கடைக்கு செப்.19 மதியம் 2:15 மணிக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து நகைகளை விசாரித்தார். பிறகு மறுநாள் வருவதாக கூறிவிட்டு அவர் சென்றார். மறுநாள் வந்த அவர் வைக்கல்பிரி மாடல் தங்க செயின் வேண்டும் என கேட்க கிருஷ்ணனும் மாடல்களை காண்பித்து விலையை தெரிவித்துள்ளார். பிறகு பணம் எடுத்து வருவதாக கூறி தான் கொண்டு வந்த கவரிங் செயினை வைத்து விட்டு, கடையில் இருந்த 2 பவுன் தங்கச்செயினை அப்பெண் திருடி சென்றார்.
இதுகுறித்து கிருஷ்ணன் புகாரின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் பஜார் வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இத்திருட்டில் ஈடுபட்ட பெண்ணை தேடி வருகின்றனர்.