ADDED : ஜன 17, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுதாய நல்லிணக்க பேரவை, சேவா பாரதி, கிரீடா பாரதி அமைப்புகள் சார்பில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி மங்காபுரம் ஹிந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.
பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை 48 கிலோ முதல் 105 கிலோ வரை உள்ள இளவட்ட கல்லை தூக்கி சாதனை படைத்தனர். தந்தை சுப்பிரமணியன், மகன் திருப்பதிராஜ் ஆகியோர் 88 கிலோ கல்லையும், மாணவி முத்து பிரியா, 58 கிலோ கல்லையும் தூக்கி பாராட்டு பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

