/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாந்தோப்பில் எரியாத தெருவிளக்குகள்
/
மாந்தோப்பில் எரியாத தெருவிளக்குகள்
ADDED : ஜூலை 03, 2025 03:11 AM
காரியாபட்டி: மாந்தோப்பில் 1 மாதமாக தெரு விளக்குகள் எரியாததால் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
காரியாபட்டி மாந்தோப்பில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் இருந்தபோது அனைத்து தெரு விளக்குகளும் சீராக எரிந்தன. நாளடைவில் ஆங்காங்கே விளக்குகள் சரி வர எரியாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் தெரு விளக்குகள் எரியாததால் மக்கள் இருளில் நடமாடுகின்றனர். இரவு நேரங்களில் தட்டு தடுமாறி நடக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தெரு விளக்குகள் எரியாதது குறித்து பலமுறை புகார் அதிகாரிகளிடத்தில் தெரிவித்தால் நிதியில்லை என மெத்தனமாக பதில் அளிக்கின்றனர். தெரு விளக்குகள் எரிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.