/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதைப்பொருள் மிட்டாய் விற்றால் கடும் நடவடிக்கை
/
போதைப்பொருள் மிட்டாய் விற்றால் கடும் நடவடிக்கை
ADDED : பிப் 17, 2025 05:59 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் எடுத்து வரப்படுகின்றன.
குறிப்பாக தடை போதைப்பொருட்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக ஊடகங்களில் போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வரும்நிலையில், மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இது போன்ற போதைப்பொருள் அல்லது போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடிய மிட்டாய் வகைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எந்தவொரு வணிகராவது இதுபோன்ற மிட்டாய் வகைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு முடியும் வரை வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 2024 ஜன. 1 முதல் 2025 ஜன. 31 வரை430 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டும், ரூ.1,13 லட்சம்அபராதம் விதிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.