/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ADDED : ஜூலை 02, 2025 07:46 AM
காரியாபட்டி : ''லாக்கப் மரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
மல்லாங்கிணரில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழகத்தை கோர பார்வையில் பார்க்கிறது.
பாசிச பா.ஜ.. வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. பா.ஜ.,வின் கோரப்பிடியில் தமிழ்நாடு சிக்கிவிடக்கூடாது.
தமிழர்களின் தொன்மையை மறைக்க பா.ஜ., செயல்படுகிறது.
மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு கையில் எடுத்து உரிய வரி பகிர்வை கொடுக்காமல் வஞ்சிக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் நம் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியல் பிரசாரம் தொடங்கிய பின், 3வது அணி அமைவது குறித்தும், தி.மு.க., பிரசாரத்தை எதிர்கொள்ளும். ஒரு சில மனித தவறுகளால் தொடர்ந்து பட்டாசு விபத்து நடக்கிறது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகம் இணைந்து விபத்து தடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பார்கள்.
லாக்கப் மரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.