UPDATED : ஆக 19, 2026 05:46 PM
ADDED : ஆக 19, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த ஆயுத்த கூட்டம் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் நடந்தது. இதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு விதிமுறை என்ற பெயரில் ஊழியர்களை துன்புறுத்தல் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆக.28ல் வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ஜெகதீஷ்குமார், மாவட்ட தலைவர் பெருமாள்ராஜ், அரசு பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
