/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் பகுதியில் பலத்த காற்று; தென்னை, வாழை மரங்கள் பாதிப்பு
/
ராஜபாளையம் பகுதியில் பலத்த காற்று; தென்னை, வாழை மரங்கள் பாதிப்பு
ராஜபாளையம் பகுதியில் பலத்த காற்று; தென்னை, வாழை மரங்கள் பாதிப்பு
ராஜபாளையம் பகுதியில் பலத்த காற்று; தென்னை, வாழை மரங்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 31, 2025 03:27 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாக அடிக்கும் பலத்த காற்றில் தென்னை சாகுபடி பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளானதுடன் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பிற்கு உள்ளானதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம், சேத்துார், தேவதானம், கோவிலுார் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
நேற்று முன்தினம் மலைப்பகுதியில் இருந்து வேகமாக அடித்த காற்று சேத்துார், தேவதானம் ராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே பிராவடி பீட் பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல இடங்களிலும் முதிர்ந்த மரங்கள் பக்கவாட்டு கிளைகள் உடைந்துள்ளதுடன், வாழை விவசாயிகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளனர். தென்னை மரங்களில் இளம் மட்டைகள் முறிந்தும், இளநீர் காய்கள், மா மரங்களில் எஞ்சியுள்ள காய்கள் காற்றை எதிர்கொள்ள முடியாமல் உதிர்ந்தும் சேதமடைந்துள்ளன.
இது குறித்து விவசாயி ராமநாதன்: விவசாய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் பற்றாக்குறையை காரணம் கூறி மின்வாரியத்தினரும் முன்னுரிமை பகுதியில் பணிகளை செய்து வருவதால் தாமதம் ஏற்படுகிறது. தேங்காய்க்கு நல்ல விலை இருந்தும் இளநீர் பருவத்தில் உதிர்ந்ததால் தென்னை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

