/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருஞ்சிறையில் உரங்கள் வாங்குவதில் விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு
/
இருஞ்சிறையில் உரங்கள் வாங்குவதில் விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு
இருஞ்சிறையில் உரங்கள் வாங்குவதில் விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு
இருஞ்சிறையில் உரங்கள் வாங்குவதில் விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு
ADDED : டிச 10, 2025 09:13 AM
நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறை கூட்டுறவில் உரங்கள் வாங்குவதில் விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவருக்கும் வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்ததால் அமைதி ஏற்பட்டது.
நரிக்குடி பகுதியில் நெல் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பயிர்கள் வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன.
உரங்கள் தெளித்தால் நல்ல விளைச்சல் இருக்கும் என்பதால் கூட்டுறவு சங்கங்களில் வாங்க விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இருஞ்சிறை கூட்டுறவு சங்கத்திற்கு உரங்கள் வந்திறங்கின.
வடக்குமடை, தர்மம், குருவியேந்தல், செங்கமடை, ஒருச்சீரங்கம்பட்டி, தேளி, கொட்டக்காட்சியேந்தல் உள்ளிட்ட கிராம விவசாயிகள் உரங்கள் வாங்க, நேற்று காலை 6:00 மணி முதல் கூடினர். உரத் தட்டுப்பாடு ஏற்படும் என்கிற அச்சத்தில் வாங்க முண்டியடித்துச் சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உரங்கள் வாங்கியவர்களுக்கே மீண்டும் வழங்குவதாக பிரச்னை ஏற்பட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வங்கி செயலாளர் நடராஜன் சமாதானம் செய்து அனைவருக்கும் உரங்கள் வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து அமைதி ஏற்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெறும் நெல் விவசாய பணிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

