ADDED : ஆக 30, 2026 12:30 AM

அ நிறம் | அளவு
தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே நெசவாளர்களுக்கு நுால் வழங்காத தமிழக அரசை கண்டித்து கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் நடந்தது.
தளவாய்புரம் அருகே புனல் வேலி நெசவாளர் கூட்டுறவு சங்கம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு பெண்கள் உட்பட 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 4 மாதங்களாக வேலை வழங்காத தமிழக அரசு, கைத்தறி துறைக்கு கண்டனம் தெரிவித்தும், 8 மணி நேர சேலை உற்பத்திக்கு ரூ.500 நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், ஆண்டு முழுவதும் வேலை வழங்கவும், புதிய உற்பத்திக்கு தறியில் மாற்றங்களுக்கான செலவை அரசு ஏற்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டத்தை முடித்தனர்.
