/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
/
சாத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
சாத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
சாத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
ADDED : மே 22, 2025 12:26 AM
சாத்துார்: சாத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் முதல்வர் சைலஸ் லவ்லி டாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சாத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மே 19 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பிட்டர், கம்மியர் மோட்டார் வண்டி, எலக்ட்ரிசன்,சோலார் டெக்னாலஜி ஃபயர் டெக்னாலஜி போன்ற பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் டாடா கன்சல்டன்சி உடன் இணைந்து இன்ட்ரஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன்,மேனுபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி என் சி மிஷினிங் டெக்னீசியன் ஆகிய மூன்று தொழில் பிரிவுகளிலும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
விண்ணப்பக் கட்டணம் ரூ 50 கல்வி ஜாதி அசல் சான்றிதழுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். www.skilltraining.tn.gov.in இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ 750 வழங்கப்படும். தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் இலவச பஸ் பாஸ் சீருடை மற்றும் அரசு வழங்கும் ஏனைய இலவச பொருட்களும் வழங்கப்படும் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பம் செய்யலாம். கடைசி நாள் ஜூன் 13.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.