ADDED : செப் 19, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் செண்பகத் தோப்பு பேச்சி அம்மன் கோயில் வளாகத்தில் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மை பணி செய்தனர்.
இதனை பள்ளி முதல்வர் சுந்தர மகாலிங்கம், சுற்றுச்சூழல் மன்ற அலுவலர் லிங்கம் துவக்கி வைத்தனர்.
சேகரிக்கப்பட்ட கழிவுகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டது.
மாணவர்களை பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.