ADDED : ஏப் 11, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் அழகர், அவரது மனைவி சங்கரேஸ்வரி, கூலி தொழிலாளர்கள். இத்தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகன் யோக தர்ஷன் 9, வன்னியம்பட்டி காளீஸ்வரி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை 4:00 மணிக்கு பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு வந்து, வேனில் இருந்து இறங்கி வேனின் முன்புறமாக ரோட்டை கடந்த போது சிறுவனை கவனிக்காத டிரைவர் சடையாண்டி வேனை நகர்த்தியதால் மாணவன் வேனில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
