தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

 நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

 நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு


ADDED : ஜூலை 16, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 12:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி அருகே மீனம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ராஜு மகன் நிக்ஷன் 14. அன்னை வேளான்கண்ணி மாதா மேல்நிலைபள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை பள்ளிக்கு வந்த நிக்ஷன் வகுப்பறைக்கு செல்லாமல் 10:00 மணியளவில் நண்பர்களுடன் சிறுகுளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார். குளித்து கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாத நிலையில் 20 அடி ஆழமுள்ள தண்ணீரில் நிக்ஷன் மூழ்கினார். சிவகாசி தீயணைப்புப் படையினர் நீரில் மூழ்கிய மாணவனை மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து, சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us