/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலையில் மாணவர் குழு துவக்கம்
/
கலசலிங்கம் பல்கலையில் மாணவர் குழு துவக்கம்
ADDED : நவ 11, 2024 03:52 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இ.சி.இ.துறை சார்பில் மேட்லப் மாணவர் குழு துவக்க விழா நடந்தது.
துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், டீன் சிவக்குமார், இயக்குனர் சுப்ரகாஷ், துறைத் தலைவர் முத்துக்குமார் வாழ்த்தினர். பேராசிரியர் ஜோஸ்பின் வரவேற்றார்.
பெங்களூர் டெரிட்டரி மேலாளர் அருள்செல்வம் மாணவர் குழுவை துவக்கி வைத்து பேசினார். மேத்வொர்க்ஸ் மேலாளர் தரணி ராஜ், ஏ.ஆர்.ஆர். நிறுவன மேலாளர் கவுதம் ராஜ்மோகன் குழு செயல்பாடுகள் குறித்து பேசினார்
ஏற்பாடுகளை பேராசிரியர் பெருமாள் செய்திருந்தார்.
பேராசிரியர் பென்னிலோ பெர்னாண்டஸ் நன்றி கூறினார்.