ADDED : ஆக 31, 2025 12:27 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் பள்ளியில் நடந்தது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற நிலையில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சாதனை மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
