/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் முறையான பாதை இன்றி சகதியில் கடக்கும் மாணவர்கள்
/
ராஜபாளையத்தில் முறையான பாதை இன்றி சகதியில் கடக்கும் மாணவர்கள்
ராஜபாளையத்தில் முறையான பாதை இன்றி சகதியில் கடக்கும் மாணவர்கள்
ராஜபாளையத்தில் முறையான பாதை இன்றி சகதியில் கடக்கும் மாணவர்கள்
ADDED : அக் 26, 2025 06:24 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் சகதியில் கடந்து சென்று பள்ளி,கல்லுாரிகளுக்கு சென்று வருவதால் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் பல்வேறு கல்வி நிலையங்கள் அமைந்துள்ளது. இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பி.எஸ்.கே நகரில் இருந்து ரயில்வே நீர்வழி பாதை வழியாக கணபதியாபுரம் ரோடு, ஐ.என்.டி.யு.சி கடந்து மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இதில் இட உரிமையாளர்கள் வேலியிட்டு இதன் அருகே பள்ளம் வெட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளதால் இதை ஒட்டி ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர். தற்போது மழையால் இங்கு தண்ணீர் தேங்கி சகதியாக மாறியதால் இதில் இறங்கி சென்று சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து முத்துமணி:
ரயில்வே மேம்பாலத்தில் சைக்கிளில் ஏறி செல்ல சிரமம் ஏற்படுவதால் ரயில்வே நீர்வழி பாதையை உபயோகித்து வந்தனர். நில உரிமையாளர்கள் வேலி போட்டுள்ளதால் பக்கவாட்டு பாதையில் சென்று வருகின்றனர். தற்போதைய மழையால் இதில் சகதியாகி மாணவர்களின் சீருடை சேதம் ஆவது உடன், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி இப்பாதையை சீரமைத்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

