மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்களின் இயக்கம் அவசியம்
மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்களின் இயக்கம் அவசியம்
ADDED : ஜூன் 24, 2026 10:50 PM

விருதுநகர்: விருதுநகரில் இருந்து தென்னமநல்லுாருக்கு மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகி யுள்ளது.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்னமநல்லுாருக்கு மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இல்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வழித்தடத்தில் உள்ள மற்ற பகுதிகளில் இருந்து காலையில் பள்ளி, கல் லுாரிக்கு வந்த மாண வர்கள், வேலைக்கு வந்த பெண்கள், பணியாளர்கள் பலர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப மாலையில் செல்லும் ஒரு அரசு பஸ்சை மட்டுமே நம்பி காத்திருக்கின்றனர்.
தென்னமநல்லுாருக்கு மாலையில் இயக்கப்படும் அரசு பஸ்சில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் தொடர்ந்து பயணம் செய்து வருகின்றனர். பஸ்கள் இல்லாததால் வேறு வழியின்றி வீடு திரும்புவதற்கு மாலையில் பரிதவித்து வருகின்றனர்.
எனவே விருதுநகரில் இருந்து தென்னமநல்லுாருக்கு மாலையில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
