/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நர்சிங் கல்லுாரியில் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க கோரி மாணவிகள் மறியல்
/
நர்சிங் கல்லுாரியில் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க கோரி மாணவிகள் மறியல்
நர்சிங் கல்லுாரியில் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க கோரி மாணவிகள் மறியல்
நர்சிங் கல்லுாரியில் கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க கோரி மாணவிகள் மறியல்
ADDED : பிப் 11, 2025 04:39 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் நேற்று மாணவிகள் கல்வி கட்டணத்தை திரும்ப தர கோரி ரோடு மறியல் செய்ததையடுத்து கல்லுாரியை மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து கல்லுாரி மீதும், நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுப்படுவதோடு, கட்டணத்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என ஆர்.டி.ஓ, வள்ளிக்கண்ணு மாணவிகளிடம் உறுதியளித்தார்.
தனியார் நர்சிங் கல்லுாரியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவியர்கள் படித்து வந்தனர். கல்லுாரி உரிய அங்கீகாரம் இல்லை எனவும், தங்களுடைய மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ், கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க கோரி இரண்டு நாட்களுக்கு முன்பு உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதை அடுத்து வருவாய்த்துறையினர், போலீசார் சான்றிதழ்களை திரும்ப வழங்கவும், கல்வி கட்டணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் நேற்று மதுரை - துாத்துக்குடி நான்கு வழி சாலை, ராமசாமிபரம் சந்திப்பில் 30 க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவிகள் தாங்கள் வழங்கிய கல்வி கட்டணத்தை உடனடியாக திரும்ப வழங்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் கலைந்து சென்றனர்.
பின்னர் மாலை மருத்துவத்துறை இணை இயக்குனர் பாபுஜி மற்றும் அதிகாரிகள் கல்லுாரியில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் படிப்புகளுக்கு எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழக அனுமதி பெறவில்லை என தெரியவந்தது.
கல்லுாரியில் கூடியிருந்த பெற்றோர் மாணவிகளிடம் ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு கூறுகையில், கல்லுாரி, தாளாளர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாணவிகளுக்கு உரிய கட்டண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தெரிவித்தார்.

