ADDED : மார் 26, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி:திருச்சுழி அருகே கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மாணவி அவரது தாயின் அலைபேசியில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் ஒருவருடன் பழகி வந்ததாகவும், இதனை பெற்றோர் மாணவியை அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு பள்ளியில் பிளஸ் ஒன் தேர்வு நடந்து வரும் நிலையில் மார்ச் 23 ல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
- - - - -
