sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 உலக, அனுபவ அறிவை பெற ஊக்கமூட்டும் புத்தகங்கள்  புத்தகக் கண்காட்சியில் குவியும் மாணவர்கள்

/

 உலக, அனுபவ அறிவை பெற ஊக்கமூட்டும் புத்தகங்கள்  புத்தகக் கண்காட்சியில் குவியும் மாணவர்கள்

 உலக, அனுபவ அறிவை பெற ஊக்கமூட்டும் புத்தகங்கள்  புத்தகக் கண்காட்சியில் குவியும் மாணவர்கள்

 உலக, அனுபவ அறிவை பெற ஊக்கமூட்டும் புத்தகங்கள்  புத்தகக் கண்காட்சியில் குவியும் மாணவர்கள்


UPDATED : நவ 22, 2025 04:51 AM

ADDED : நவ 22, 2025 04:30 AM

Google News

UPDATED : நவ 22, 2025 04:51 AM ADDED : நவ 22, 2025 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ஒருவர் தன் வாழ்வில் புத்தகங்களை வாங்க துவங்கி விட்டால், அவை வாழ்வின் ஆகச்சிறந்த நல்வரவாக மாறி விடுகின்றன. தமிழ் மொழிக்குள் எவ்வளவு இனிமை, தாய்மை, நுண்மை, வலிமை உள்ளதோ அதே வளம் கொண்ட சொற்களை அடங்கிய புத்தகங்களுக்கும் உண்டு.

உலக அறிவைப் பெறுவதற்கு நாம் பல்வேறுபட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அனைவரும் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டும். அலைபேசிக்குள் முடங்கி கிடக்காமல் புத்தகத்திருவிழாக்கள் நோக்கி இளம் பட்டாளம் பல படையெடுக்க துவங்கி விட்டன. அதற்கு விருதுநகர் புத்தகத் திருவிழாவே சாட்சி.

காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும் இங்கு குடும்பத்தலைவிகள் பலர் வந்து செல்கின்றனர். இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம்.

பார்வையாளர்கள் சொல்வது என்ன...
அறிவார்ந்த சமூகம் வேலைவாய்ப்பு தொடர்பான புத்தகங்களை வாங்க உள்ளேன். புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க விரும்புகிறேன். அறிவார்ந்த சமூகத்தில் நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். கல்லுாரி பேராசிரியர்கள் நன்றாக ஊக்கமளிக்கின்றனர். - - கிருஷ்ணவேணி நோபிள் மகளிர் கல்லுாரி, அருப்புக்கோட்டை. ஆர்வம் தீராது புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் ஒரு போதும் தீராது.
'சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி,' புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது. கரிசல் மண்ணின் நாதஸ்வர கலைஞர்களை பற்றி கூறும் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலும் மிகவும் பிடித்தமான நுால். எனது பள்ளி மாணவர்களையும் நிறைய வாசிக்க ஊக்கமளிக்கிறேன். - ஜெயக்குமார், ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, நாகப்பாளையம், ஸ்ரீவில்லிபுத்துார். மூலதனமாகும் வாசிப்பு ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். கடந்தாண்டு நிறைய முன்னேற்றம் தரும் புத்தகங்கள் வாங்கினேன். இந்தாண்டு ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் பண்டு, பணம் சார் உளவியல், பணம் சேமிப்பது தொடர்பான புத்தகங்களை வாங்கியுள்ளேன்.பணம் சம்பாதிக்க மூலதனமாக இருப்பதே அறிவார்ந்த வாசிப்பு தான். - பி.ரேகா, தொழில்முனைவோர், விருதுநகர். திருவிழா போல் நடக்கிறது நிறைய மக்கள் வந்து செல்வதால் நிறைய கடைகள் போட்டுள்ளனர். இது திருவிழா போல் நடப்பதால் தினசரி நல்ல நல்ல பேச்சாளர்களின் வார்த்தைகளை கேட்க முடிகிறது. புத்தகங்களை படிப்பதால் நாம் எந்தளவு அலைபேசி அடிமையில் விடுபடலாம் என்பது தெரிந்து கொண்டேன். - செல்வநாதன், உதவிப் பேராசிரியர் செந்திக்குமார நாடார் கல்லுாரி, விருதுநகர்



கவனத்தை ஈர்த்த புத்தகங்கள்
சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர்: சந்திரிகா சுப்ரமணியன் வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட். விலை ரூ:250 தமிழ் எழுத்து சீர்திருத்தம், கணித்தமிழ் வளர்ச்சி, நாணயவியல் ஆய்வு, பத்திரிகை ஆசிரியர் பணி என்ற தளங்களில் புரிந்துள்ள அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி சாதனைகளை கூறும் வாழ்க்கை வரலாற்று நுால். எல்லா நிலைகளிலும் முதன்மை நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்தில் சங்க கால வரையறையை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர் அறிஞர்கள். இந்த பழமை குறைந்தபட்ச எல்லை தான். அதிகபட்ச எல்லை கி.மு., 5ம் நுாற்றாண்டுக்கும் முற்பட்டது என்று நாணயவியல் ஆய்வுகள் வாயிலாக நிறுவியுள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி. சங்க கால நாணயவியல் ஆய்வில் மேன்மை கொண்டதால் தான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் உயரிய தொல்காப்பியர் விருதை ஜனாதிபதியின் திருக்கரத்தால் இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. கூட்டு விளைவு ஆசிரியர்: டேரன் ஹார்டி விலை: ரூ.299 வெளியீடு: மஞ்சுள் உங்களுடைய தீர்மானங்கள் தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன. அன்றாடம் நீங்கள் மேற்கொள்கின்ற சிறிய தேர்ந்தெடுப்புகள், ஒன்று, உங்களுடைய கனவு வாழ்க்கையை நோக்கி உங்களை நகர்த்தும், அல்லது பேரழிவுக்கு உங்களை இட்டுச் செல்லும். வெற்றியை முடுக்கிவிடுகின்ற அடிப்படைக் கொள்கைகளை இந்நூல் வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான வெற்றியைக் கைவசப்படுத்த விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய, நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய, இறுதியில் மேதமை பெற வேண்டிய விஷயங்களை இந்நூல் தெள்ளத் தெளிவாகத் தொகுத்துரைக்கிறது. இன்றே உங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்குங்கள். தாணுமாலயன் ஆலயம் சுசீந்திரம் கோவில் வரலாறு ஆசிரியர்: அ.கா.பெருமாள் வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் விலை: ரூ.250 கன்னியாகுமரி கோயில்களிலேயே பெரியது. கலை அம்சம் மிக்கது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது சுசீந்திரம் தாணுமாலயன் கோயில். இக்கோயிலின் ஆலய வரலாறுகள் கூறும் நுால்களுள் இந்நுால் ஒரு புதிய பரிமாணமாக உள்ளது. கல்வெட்டியல், வரலாற்றியல் ஆதாரங்களின் பின்னணியில் சமூக வரலாற்றியல், நாட்டார் வழக்காற்றியல் தரவுகளை உரிய இடங்களில் மிக யதார்த்தமாக பின்னித் தொடுத்த அழகிய படைப்பு இது. கோயில் மரபு சார்ந்த ஐதீகங்களையும், புராண வழக்காறுகளையும், வழிபாட்டு மரபுகளையும் இணைத்துத் தரவும் தவறவில்லை. கடலுக்கு அப்பால் ஆசிரியர்: ப.சிங்காரம் வெளியீடு: ரிதம் விலை: ரூ.240 இரண்டாம் உலகப் போர்க்காலத்தின் நெருக்கடி நிலையை மையமாக வைத்து ஒரு அற்புதமான காதலை இணைத்து புனைவாக்கப்பட்ட இந்நாவல், தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று. தமிழகத்தில் பிழைப்புக்கு வழியின்றி தென் கிழக்காசிய நாடுகளுக்குப் பஞ்சம் பிழைக்க போன மக்களின் வாழ்வை இரண்டாம் உலகப்போர் எப்படியெல்லாம் சிதைத்துச் சீரழித்தது என்பதன் கண்கூடான சாட்சியான இந்நாவலில் போர்க்காலச் சூழலில் வாழும் மக்களின் காதல், உன்னதம், பிரிவு. துயரம். ஆற்றாமை ஆகியவை தத்ரூபமாக அரங்கேறியுள்ளன.



தினமலர் சந்தா செலுத்தினால்

ரூ.1000 மதிப்பில் புத்தகங்கள் இலவசம்



புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 33ல் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் சந்தா ஒன்று பலன் மூன்று சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால் ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சத்தில் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு, ரூ.5 லட்சத்தில் தனிநபர் விபத்து காப்பீடு, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கு ரூ.1 லட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. சந்தா செலுத்தினால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us